அந்த மைவி கார் ஓட்டுநருக்கான தடுப்புக் காவல் நேற்று (பிப்ரவரி 12) முதல் பிப்ரவரி 14 வரை ரெம்பாவ் கீழ்நிலை நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில விசாரணை மற்றும் அமலாக்கத் துறை துணைத் தலைவர் சைபுலிசான் சுலைமான் தெரிவித்தார்.
கடந்த செவ்வாயன்று, இந்த சம்பவம் குறித்த 59 விநாடிகள் நீளமுள்ள காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி பொது மக்களின் கவனத்தைப் பெற்றது.
செனாவாங் அருகே 235.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளாஸ் நெடுஞ்சாலையில் பிற்பகல் 3.21 மணியளவில், அச்சிறுவன் குடும்பத்துடன் பயணித்த வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயங்களுக்கு ஆளானார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய பெரோடுவா மைவியின் ஓட்டுனர் செவ்வாய்க்கிழமை மாலை 4.50 மணியளவில் மலாக்கா பத்து பெரெண்டாமில் கைது செய்யப்பட்டார்.