Home One Line P1 மாற்றாந்தாயை விட பெற்றத் தாய்மார்களிடையே சிறார் கொடுமைகள் அதிகம்!

மாற்றாந்தாயை விட பெற்றத் தாய்மார்களிடையே சிறார் கொடுமைகள் அதிகம்!

690
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாற்றாந்தாய்மார்களின் சிறார் கொடுமைகளுக்கு எதிராக பெற்றத் தாய்மார்களின் கொடுமை வழக்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 685 வழக்குகளில் 39 விழுக்காட்டு சிறுவர்கள் தங்களின் பெற்றத் தாயாரால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தந்தைகள் 158 வழக்குகள் அல்லது 32 விழுக்காடு பதிவுசெய்துள்ளனர்.

செவிலியர்கள் 29 வழக்குகள் (ஆறு விழுக்காடு) பதிவு செய்துள்ளனர். அதே சமயம் மாற்றாந்தாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் மூன்று விழுக்காடு அல்லது 15 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

கடந்த ஆண்டு 15999 ‘டாலியான் காசெ’ மூலம் பெறப்பட்ட 25,868 அழைப்புகளில் இந்த எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டதாக துணை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

“கடந்த ஆண்டை விட, ‘டாலியான் காசெ’ மூலம் பெறப்பட்ட அழைப்புகள் 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. மேலும் இது வழங்கப்படும் சேவைகளைப் பற்றி அதிகமான மக்கள் அறிந்திருப்பதை இது காட்டுகிறது.”

“அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள் வீட்டு வன்முறைகள், சிறார் கொடுமை சம்பந்தப்பட்டவை ” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.