Home One Line P1 பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்மாணிப்புக்கு விக்னேஸ்வரன் 65 ஆயிரம் நன்கொடை

பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்மாணிப்புக்கு விக்னேஸ்வரன் 65 ஆயிரம் நன்கொடை

749
0
SHARE
Ad

கிள்ளான் – பண்டமாரானில் (கிள்ளான்) உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 15) வருகை மேற்கொண்ட மஇகா தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அந்த ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணிப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரனின் வருகையின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத் தேவன், மஇகா கிள்ளான் தொகுதித் தலைவர் தர்மலிங்கம் ஆகியோரும், ஆலயப் பொறுப்பாளர்களும் உடனிருந்தனர்.

இதற்கிடையில் பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்மாணிப்புப் பணிகளுக்காக 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடையை விக்னேஸ்வரன் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் என ஆலயத்தின் தலைவர் கோ.இராஜரத்தினம் கூறினார்.

#TamilSchoolmychoice

விக்னேஸ்வரன் இந்த ஆலய நிர்மாணிப்புப் பணிகளுக்கு என ஏற்கனவே 15 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்கியிருக்கிறார். தற்போது வழங்கவிருக்கும் 50 ஆயிரம் ரிங்கிட்டுடன் சேர்த்து இதுவரையில் விக்னேஸ்வரன் 65 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை பண்டமாரான் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு வழங்கியிருக்கிறார் எனவும் இராஜரத்தினம் உறுதிப்படுத்தினார்.