Home நிகழ்வுகள் இந்திய மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா

இந்திய மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா

700
0
SHARE
Ad

somasundramகோலாலம்பூர், ஏப்ரல் 9- எதிர்வரும் 13.4.2013 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் கூட்டுறவுக் காவலர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் தலைமையில் ‘திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா’  நடைபெறவுள்ளது.

மலேசியாவிலுள்ள மாணவர்கள் அனைவரும் திருக்குறளை படிக்கும் விதத்தில் நான்கு மொழிகளில் மலேசிய பேராசிரியர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திருக்குறள் நூல்களை  இந்நிகழவில் வழங்கப்படவுள்ளது.

அழைப்பிதழ் கிடைக்காத பள்ளிகள் இதனையே அழைப்பாக ஏற்று வரும் ஏப்ரல் 13 தேதி  தலைநகரில் உள்ள டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

#TamilSchoolmychoice

பின் குறிப்பு:-

தலைமையாசிரியர்கள்  6ஆம் ஆண்டு மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை மட்டும்  நிகழ்ச்சியன்று  கொடுத்து நூல்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு, துரை இலக்குமணன் (விழா ஒருங்கிணைப்பாளர்) 014-3843905, ஜோசப் செபஸ்டியன் (செயலாளர்) 017-6918497, அம்பாங் சுப்ரா (துணைத்தலைவர்) 017-3586826 மற்றும் சுப.நாராயண சாமி  03-20341669 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.