Home One Line P1 “இன சூழ்ச்சிகளைக் கொண்டு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்போரை மக்கள் அனுமதிக்கக்கூடாது!”- வான்...

“இன சூழ்ச்சிகளைக் கொண்டு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்போரை மக்கள் அனுமதிக்கக்கூடாது!”- வான் அசிசா

622
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அதை பராமரிக்க மக்கள் எப்போதும் பாடுபட வேண்டும் என்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எச்சரித்தார்.

மக்களிடையே உள்ள நல்லிணக்கம், மதங்கள், இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒற்றுமையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார் .

#TamilSchoolmychoice

மதம், இனம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த நாட்டு மக்கள் தங்களுக்கு பொதுவான பல மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

“ஒரு சகாவின் மனநிலையைப் பின்பற்றுவது எளிதானது. இதில் பகுத்தறிவைக் காட்டிலும், உணர்ச்சிகளின் அடிப்படையில் அவர்களின் நடத்தைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம்.”

“ஆனால் இது ஆபத்தானது, ஏனென்றால் நாட்டின் பல்லின மற்றும் மத சமூகங்களின் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது செய்ய முடியும்” என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பண்டான் நாடாளுமன்ற சீன புத்தாண்டு திறந்த இல்லத்தில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

நாட்டில் இன உணர்வை வளர்ப்பதற்கு மக்கள் தங்கள் சொந்த சூழ்ச்சிகளைக் கொண்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.