Home One Line P2 மறுஉருவாக்கம் பெறும் பாடல்களுக்குப் பதிலாக இரசிகர்கள் அசல் பாடல்களையே விரும்புகிறார்கள்!- ஏ.ஆர். ரஹ்மான்

மறுஉருவாக்கம் பெறும் பாடல்களுக்குப் பதிலாக இரசிகர்கள் அசல் பாடல்களையே விரும்புகிறார்கள்!- ஏ.ஆர். ரஹ்மான்

811
0
SHARE
Ad

சென்னை: இந்தியத் திரையிசையை உலகளவில் கொண்டு சென்று சேர்த்ததில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் முக்கிய இடம் வகிக்கிறார்.

பெரும்பாலான அவரது பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் முதலிடம் பிடித்து விடுகின்றன. ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமாகி, அனைவரது கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்தார். இந்தியத் திரைப்படங்களுக்கு புதியதொரு முகத்தை வழங்கினார்.

பொதுவில் அதிகமாகப் பேசாதவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் மறுஉருவாக்கம் பெறும் பாடல்கள் குறித்து விமர்சித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவ்வாறான பாடல்கள் தமக்கு எரிச்சலூட்டும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தாம் இசையமைத்த பம்பாய் திரைப்படப் பாடலை ஒரு முறை மறுஉருவாக்கம் செய்திருப்பதாகக் கூறினார்.

இவ்வாறான செயல்பாடுகளில் தமக்கு உடன்பாடில்லை என்றும், அவ்வாறு செய்யும் பொழுது இரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.