Home One Line P2 குடியுரிமைச் திருத்தச் சட்டம்: காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தொடரும் போராட்டம்!

குடியுரிமைச் திருத்தச் சட்டம்: காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தொடரும் போராட்டம்!

664
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறவேற்றப்பட்டதிலிருந்து போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வரும் நிலையில், அண்மையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது பலரின் எதிர்ப்புகளைத் தாண்டி போராட்டமாக வெடித்துள்ளது.

அதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்காவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) போராட்டம் நடத்தப்படுகிறது.

காவல் துறையினரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.

#TamilSchoolmychoice

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, இவ்விவகாரம் மேலும் பெரிதாவதை தடுக்க வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஏஏவுக்கு எதிரான போராட்டம் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.