Home One Line P1 பிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி –...

பிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்

984
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் பிரதமர் பதவிப் பரிமாற்றம் குறித்த முடிவு என்னவாக இருந்தாலும், எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் தான் பதவி விலகுவது உறுதி என துன் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புத்ரா ஜெயாவில் இன்று செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது மகாதீர் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“வாக்குறுதி அளித்தபடி நவம்பரில் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் நான் கண்டிப்பாகப் பதவி விலகுவேன்” எனவும் மகாதீர் கூறினார்.