Home Photo News இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “தெலுங்கு ஜானு” சமந்தா – திரையுலகில் இருந்து விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “தெலுங்கு ஜானு” சமந்தா – திரையுலகில் இருந்து விலகுகிறாரா?

795
0
SHARE
Ad

சென்னை – ஆரம்ப காலத்தில் அழகுப் பதுமையாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் சமந்தா. இருந்தாலும் வரிசையாக முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நாயகியாக வலம் வந்தார் சமந்தா. விஜய், சூர்யா பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் அவர் இணை சேர்ந்த படங்கள் வெற்றி பெற இராசியான நடிகையாகவும் மதிக்கப்பட்டார்.

தெலுங்குப் படவுலகமும் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு நல்கியது. தெலுங்குப் படவுலகின் முன்னணி கலையுலகக் குடும்பமான நாகேஸ்வரராவ் குடும்பத்தின் வாரிசும், நடிகர் நாகார்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் இணை சேர அதுவே அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் முகிழ்வதற்கும் காரணமாக அமைந்தது.

நாகசைதன்யா – சமந்தா திருமணம் முடிந்தாலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் சமந்தா. இத்தனைக்கும் திருமணத்திற்குப் பிந்திய படங்களில்தான் சமந்தாவின் தனித் திறமை வெளிச்சத்துக்கு வந்தது என்பதோடு, தனது திறனுக்குச் சவால் விடும் கதாபாத்திரங்களிலும், துணிச்சலான வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார் சமந்தா.

#TamilSchoolmychoice

குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் தன்மையும், அவர் பேசிய வசனங்களும் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தாலும், இரசிக்கும்படியும் அவரது சிறந்த நடிப்பை வெளிக் கொணரும் வண்ணமும் அமைந்தன.

தெலுங்கில் அவர் நடித்த “ஓ பேபி” சக்கைப் போடு போட, அடுத்ததாக அண்மையில் வந்த “ஜானு” திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற “96” திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்புதான் “ஜானு”. இந்தப் படத்தோடு திரையுலகை விட்டு விலகி முழுநேர குடும்ப வாழ்க்கையில் சமந்தா ஈடுபடப் போகிறார் என சில ஊடகங்கள் தெரிவித்தாலும், தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக் கொண்டும் வருகிறார் எனத் திரையுலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு இரசிகர்களைக் கவர்ந்திழுப்பதிலும் சமந்தா முன்னணி வகிக்கிறார். அதன் காரணமாகவே, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 9.3 மில்லியன் இரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

சமந்தாவின் அண்மையப் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: