Home One Line P1 சுல்தான் இட்ரிஸ் பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தின் தேசிய தமிழ் இலக்கிய விழா 2020

சுல்தான் இட்ரிஸ் பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தின் தேசிய தமிழ் இலக்கிய விழா 2020

1070
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் – சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் 17 & 18-ஆம் தேதிகளில் “தேசிய அளவிலான தமிழ் இலக்கிய விழா 2020” எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் மாணவர்களுக்கிடையே நடைபெறும் இலக்கியப் போட்டிகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும். எஸ்.பி.எம் மாணவர்களுக்கென நாடகப் போட்டி, கவிதை ஒப்புவித்தல், சொற்போர் ஆகிய மூன்று போட்டிகளும் எஸ்.தி.பி.எம் மாணவர்களுக்கென கட்டுரை வரையும் போட்டி, கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அனைத்துப் போட்டிகளுமே அவர்களது இலக்கியப் பாடத்தைத் தழுவியே அமைந்திருக்கும். இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த வண்ணம் சிறப்பாக நடந்தேற பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியின் விபரங்கள் பின்வருமாறு :

நாள் : 17 & 18 மார்ச் 2020
நேரம் : காலை 8 முதல் இரவு 10 வரை
இடம் : Auditorium Utama, Kampus Sultan Abdul Jalil Shah, Universiti Pendidikan Sultan Idris.

மேல் விபரங்களுக்கு : ச.விக்னேஸ்வரி (நிகழ்ச்சி இயக்குனர்)
011-16186519 (தொடர்பு எண்)