Home One Line P1 “சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது!”- சாட்சி

“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது!”- சாட்சி

654
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமானவராக இல்லாவிட்டால், தேசிய முன்னணிக்கு 6 மில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை வழங்கி இருக்கமாட்டார் என்று டேட்டாசோனிக் குழுமத்தின் (டிஜிபி) துணை நிர்வாக இயக்குனர் இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் கூறினார்.

63 வயதான செவ் பென் பென் கூறுகையில், அகமட் சாஹிட் மூலமாக வழங்கப்படும் இந்த நன்கொடை நீண்ட கால அடிப்படையில் இருக்கட்டும் என்று முன்னாள் டிஜிபி தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அபு ஹனிபா நூர்டினுக்கு பரிந்துரைத்ததாகக் கூறினார்.

2017-இல் ஏப்ரல் மாதத்தில் புத்ராஜெயாவில் உள்ள தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அகமட் சாஹிட்டை சந்தித்ததாக சென் கூறினார். அந்த சமயத்தில் அகமட் சாஹிட் தாம் அரசியலில் நுழைவதற்கு முன்பதாக தனது வாழ்க்கைப் பாதைக் குறித்து தம்மிடம் கூறியதாக சென் கூறினார்.

#TamilSchoolmychoice

“டிஜிபி நிறுவனத்தின் நல்ல செயல்திறனுக்காக தான் அதை நான் மதிக்கிறேன் என்று அகமட் சாஹிட் என்னிடம் கூறினார்.”

“தேர்தல் நெருங்கிவிட்டது மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை என்ன என்பதையும் அவர் எனக்குத் தெரிவித்தார்,” என்று அவர் துணை அரசு வழக்கறிஞர் கன் பெங் குன்னின் பரிசோதனையின் போது இவ்வாறு கூறினார்.

“அச்சந்திப்பின் போது, அகமட் சாஹிட் அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்து வரவிருக்கும் தேர்தல்களைப் பற்றி விவாதிக்க இருப்பதாகக் கூறினார்.”

“தேர்தல் நோக்கங்களுக்காக தேமுவுக்கு அரசியல் பணம் தேவை என்று அப்போது நான் உறுதியாக நம்பினேன். பின்னர் நான் அகமட் சாஹிட்டிடம், டத்தோ ஹானிபாவும் நானும் தேசிய முன்னணிக்கு அரசியல் நன்கொடைகளை வழங்க முடியுமா, எவ்வளவு பணம் தேவை என்று கேட்டேன்.” என்று சென் குறிப்பிட்டார்.

முன்னாள் துணை பிரதமருக்கு சொந்தமான அகால்புடி அறக்கட்டளையின் அறங்காவலர் லூயிஸ் அண்ட் கோ சார்பாக ஒரு காசோலையைத் தயாரிக்குமாறு அகமட் சாஹிட் பின்னர் அவருக்கு உத்தரவிட்டார் என்றும் சென் கூறினார்.