Home அரசியல் தியான் சுவா சபா மாநிலத்திற்கு அனுமதிக்கப்படாதது சொந்த பாதுகாப்பு கருதியே – அரசியல் நோக்கம் அல்ல!

தியான் சுவா சபா மாநிலத்திற்கு அனுமதிக்கப்படாதது சொந்த பாதுகாப்பு கருதியே – அரசியல் நோக்கம் அல்ல!

598
0
SHARE
Ad

tian-chua-2-sliderகோத்தாகினபாலு, ஏப்.10- தியான் சுவா சபா மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாதது சொந்த பாதுகாப்பு காரணம் கருதித்தான் என்றும், எந்தவித அரசியல் நோக்கமும் அல்ல என்றும் சபா மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.

அந்த அறிக்கையில் தியான் சுவா பல முறை சபா மாநிலத்திற்கு வந்து இருக்கிறார். அப்பொழுது எல்லாம் அவரை தடுத்து நிறுத்தியது கிடையாது.

அண்மையில் லாஹாட் டத்துவில் நடந்த தீவிரவாதிகளின் ஊடுருவல் பிரச்சினையின்போது அம்னோவின் அரசியல் நாடகம் என்று தியான் சுவா தெரிவித்திருந்தார். அதனால் அவர் சபாவிற்கு சென்று கூட்டங்களில்  கலந்து கொண்டால் அவரது பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படும் என்பதால் மட்டுமே அவருக்கு சபா மாநிலத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தியான் சுவா மட்டுமல்ல. எதிர்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், லிம் கிட் சியாங் ஆகியோரும் சபா மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்கள் யாரையும் இதுவரை தடுத்து நிறுத்தியது இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தியான் சுவா சபா மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாம்ல திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.