புது தில்லி, ஏப்ரல் 10- எப்படியாவது பிரதமராகி விட வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விரும்புகிறார் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி சாடி உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:-
பிரதமர் பதவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விரும்புகிறார். பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு முடிவு செய்பவர் தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்ற நினைப்பில் அவர் செயல்படுகிறார்.
பிகார் போன்ற மாநிலங்கள் குஜராத் மாநில முன்னேற்றத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர் பிகார் மாநில முன்னேற்றத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
அவர் தான் அடுத்த பிரதமர் என்ற நினைப்பில் மோடி பேசி வருகிறார். நலிந்த தரப்பினர் முன்னேற வாய்ப்பு தருவது தான் பிகார் மாநில முன்னேற்றம். பிகாரின் வளர்ச்சி விகிதம் குஜராத் மாநிலத்தை விட சிறப்பானதாகும் என்றார் திவாரி.