Home One Line P2 கொவிட்-19: முதல் பிரிட்டன் நாட்டவர் மரணம்!

கொவிட்-19: முதல் பிரிட்டன் நாட்டவர் மரணம்!

869
0
SHARE
Ad

தோக்கியோ: தோக்கியோ அருகே கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளான கப்பலில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிட்டன் நாட்டினைச் சேர்ந்த நபர் இறந்துவிட்டதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத அந்நபரின் மரணம் டயமண்ட் பிரின்சஸ் பயணக் கப்பலில் ஏற்பட்ட தொற்றுநோய்களுடன் சமீபத்தியதாக இணைக்கப்பட்டுள்ளது. 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை வழங்காமல் வெள்ளிக்கிழமை அவரின் இறப்பை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. நோயால் இறந்த முதல் பிரிட்டன் நாட்டவர் அவர் ஆவார். மேலும் ஐந்து ஜப்பானிய நாட்டினர் இந்நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஜப்பானின் கிராமப்புற வடக்கு தீவான ஹொக்கைடோவின் ஆளுநர் இந்த வார இறுதியில் கொரொனாவைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்களை வீட்டில் தங்குமாறு வலியுறுத்தியதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.