Home One Line P1 பினாங்கு: பிகேஆரைச் சேர்ந்த அபிப் பாஹார்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்!

பினாங்கு: பிகேஆரைச் சேர்ந்த அபிப் பாஹார்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்!

670
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: டாக்டர் அபிப் பாஹார்டின் இன்று புதன்கிழமையிலிருந்து (மார்ச் 4) பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கட்சி மாநாட்டில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பிகேஆரிடமிருந்து அவருக்கு காரணக் கடிதம் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரது பதவி விலகலை பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரான அபிப், செபெராங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பார் என்று நம்பப்படுகிறது.

மேலும் இன்று தமது எதிர்கால அரசியல் திசையை அபிப் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.