Home One Line P1 சைபுடின் நாடாளுமன்ற இருக்கையை காலி செய்ய வேண்டும்!- இண்டெரா மக்கோத்தா பிகேஆர் தொகுதி

சைபுடின் நாடாளுமன்ற இருக்கையை காலி செய்ய வேண்டும்!- இண்டெரா மக்கோத்தா பிகேஆர் தொகுதி

612
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இண்டடெரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைபுடின் அப்துல்லா பிகேஆரை விட்டு வெளியேற முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவளித்த தொகுதி இப்போது அவர் நாடாளுமன்ற இருக்கையை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளது.

அப்போதைய கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் ஆசியும், 14-வது பொதுத் தேர்தலின் போது தொகுதியின் தேர்தல் இயந்திரங்களின் உதவியால்தான் இண்டடெரா மக்கோத்தாவில் சைபுடின் வெற்றி பெற்றார் என்று இண்ட்ரா மக்கோத்தா பிகேஆர் தொகுதி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“அவர் வாக்காளர்களின் ஆணைக்கு துரோகம் இழைத்ததோடு இல்லாமல், பிகேஆரின் நற்பெயரையும் சேதப்படுத்தியுள்ளார்” என்று அது கூறியுள்ளது.