Home One Line P1 மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் 8-க்கு மாற்றம்!

மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் 8-க்கு மாற்றம்!

623
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் 8-க்கு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் இது ஜூன் முதல் திங்கட்கிழமை அன்று அனுசரிக்கப்படும்.

கொண்டாட்டத்திற்கான ஆரம்ப தேதி ஜூன் 6 என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் சுகி அலி தெரிவித்தார்.

“2021 முதல் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் ஆட்சி முடிவடையும் வரை, அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் முதல் திங்கட்கிழமை அன்று வரும் என்று அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது” என்று அவர் இன்று அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.