Home 13வது பொதுத் தேர்தல் வேட்பாளர் தேர்வு – தொகுதி மாற்றங்களில் பழனிவேலுவின் செயலால் பலர் அதிருப்தி

வேட்பாளர் தேர்வு – தொகுதி மாற்றங்களில் பழனிவேலுவின் செயலால் பலர் அதிருப்தி

666
0
SHARE
Ad

Palanivel-Sliderகோலாலம்பூர், ஏப்ரல்-10  அனைத்து கட்சியினரும் வரும் பொதுத்தேர்தலில் தங்களின் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் புதுமுகங்களையும், தகுதியான வேட்பாளர்களையும் களமிறக்கி வருகின்றார்கள்.

ஆனால் ம.இ.கா. தேசியத் தலைவரின் வேட்பாளர்கள் தேர்வும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளும் பல ம.இ.கா தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட டத்தோ ஆர்.கணேசன் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் வேளையில் ம.இ.கா. மெலிந்தாங் மாஜு தலைவர் எம்.அப்பள நாயுடுவை (வயது 61) வேட்பளாராக நிறுத்த பழனிவேல் எண்ணம் கொண்டிருப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பல தகுதியான வேட்பாளர்கள் இருக்கும் வேளையில் 61 வயதான அப்பள நாயுடுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமா? என்பதும் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

மேலும் ஜசெகவின் கோட்டைகளான புந்தோங், துரோனோ, ஜாலோங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ம.இ.கா.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அச்சட்டமன்றத் தொகுதிகளை மாற்றி கொள்ள பழனிவேல் எவ்வாறு சம்மதித்தார் என்றும், அவரின் இந்த முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் பல ம.இ.கா. தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் இவையெல்லாம் ஜசெக அல்லது மற்ற எதிர்க்கட்சிகள் எளிதாக வெல்லக் கூடிய சாத்தியமுள்ள தொகுதிகள் என்றும் பேராக் ம.இ.காவினர் கருதுகின்றனர்.

2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பேரா மாநிலத்தில் ம.இ.கா. போட்டியிட்ட ஊத்தான் மெலிந்தாங், பாசீர் பான்ஜாங், பெஹ்ராங், சுங்கை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பழனிவேல் ஒப்புக் கொண்டுள்ள தொகுதி மாற்றங்களால் மீண்டும் ம.இ.கா எல்லா பேராக் மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவும் நிலைதான் ஏற்படப் போகிறது என்று உள்ளூர் ம.இ.காவினர் கருதுகின்றனர்.