மலாக்கா: மொத்தம் 15 மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முகமட் காலில் யாகோப்பை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
13 தேசிய முன்னணி மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஜெய்லானி காமிஸ் மற்றும் பெங்காலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிசாம் ஹசான் பாக்தி ஆகியோர் ஆளுநரைச் சந்தித்தனர்.
இந்த கூட்டத்தில் மலாக்காவின் புதிய முதலமைச்சரின் நியமனம், நியமனக் கடிதம் மற்றும் கீழ்ப்படிதல் நியமனம் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று மாநில ஆட்சி நியமனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அது வரும் மார்ச் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.