Home One Line P1 புதிய சட்டத்துறைத் தலைவராக டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் நியமனம்!

புதிய சட்டத்துறைத் தலைவராக டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் நியமனம்!

468
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் இரண்டு ஆண்டு காலத்திற்கு சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 145-வது பிரிவின் பிரிவு (1)-இன் படி இந்த நியமனம் மாமன்னரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிப்ரவரி 28-ஆம் தேதி தனது பதவியிலிருந்து முன்கூட்டியே விலக கடிதம் வழங்கிய டான்ஸ்ரீ டோமி தோமஸின் கோரிக்கையையும் மாமன்னர் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இது மத்திய அரசியலமைப்பின் பிரிவு 145-வது பிரிவு (5)-இன் படி உள்ளது.”

“சட்டத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் டோமி நாட்டிற்கு செய்த சேவைக்கு அரசாங்கம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது” என்று அது குறிப்பிட்டுள்ளது.