Home One Line P1 மொகிதின் யாசின் அமைச்சரவை – முழுப் பட்டியல்

மொகிதின் யாசின் அமைச்சரவை – முழுப் பட்டியல்

1199
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை (மார்ச் 9) பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்த புதிய அமைச்சரவையின் முழுப்பட்டியல் பின்வருமாறு:

பிரதமர் – டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

நான்கு மூத்த அமைச்சர்கள் பிரதமருக்குத் துணையாக நியமிக்கப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

அவர்கள் பின்வருமாறு:

  • டத்தோஸ்ரீ அஸ்மின் அலி (அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர்)
  • டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (தற்காப்பு அமைச்சர்)
  • டத்தோஸ்ரீ படிலா யூசோப் (பொதுப்பணி அமைச்சர்)
  • டாக்டர் முகமட் ரட்சி முகமட் ஜிடின் (கல்வி அமைச்சர்)

பிரதமர் வெளிநாட்டில் இருக்கும் காலங்களில் இவர்கள் நால்வரும் அரசாங்கத்தைக் கூட்டாக நியமித்து வருவர்.

அமைச்சரவைப் பட்டியல் :

அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் – டத்தோஸ்ரீ அஸ்மின் அலி 

துணை அமைச்சர்: டத்தோ லிம் பான் ஹொங் (செனட்டராக நியமிக்கப்படுவார்)

தற்காப்பு அமைச்சர் – டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்

துணை அமைச்சர்: டத்தோஸ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அசிஸ்

பொதுப்பணி அமைச்சர் – டத்தோ பாடிலா யூசோப்

துணையமைச்சர் – டத்தோ டாக்டர் ஷாருடின் பின் முகமட் சாலே

கல்வி அமைச்சர் – முகமட் ராட்சி முகமட் ஜிடின் 

துணை அமைச்சர் 1: டத்தோ மா ஹாங் சுன் (செனட்டராக நியமிக்கப்படுவார்)

துணை அமைச்சர் 2: முஸ்லிமின் யாஹ்யா 

நிதி அமைச்சர் – தெங்கு டத்தோஸ்ரீ  சாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் (செனட்டராக நியமிக்கப்படுவார்)

துணை அமைச்சர் 1: டத்தோ அப்துல் ராகிம் பாகெரி 

துணை அமைச்சர் 2: முகமட் ஷாஹார் அப்துல்லா 

பிரதமர் துறை அமைச்சர்- பொருளாதார விவகாரங்கள் – டத்தோஸ்ரீ முஸ்தாபா பின் முகமட்

துணையமைச்சர் – ஆர்தர் ஜோசப் குரூப்

பிரதமர் துறை அமைச்சர் – சிறப்புப் பணிகள் – டத்தோஸ்ரீ முகமட் ரிட்சுவான் முகமட் யூசோப்

துணையமைச்சர் – டத்தின் மஸ்துரா பிந்தி யாசிட்

பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் & சட்டத்துறை): டத்தோ தக்கியூடின் ஹசான் 

துணை அமைச்சர்: டத்தோ எடின் ஷாஸ்லீ சிட் 

பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) : டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஜி சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி (செனட்டராக நியமிக்கப்படுவார்)

துணை அமைச்சர்: அகமட் மர்சுக் ஷாரி 

பிரதமர் துறை அமைச்சர் (சபா & சரவாக் விவகாரங்கள்): டத்தோஸ்ரீ டாக்டர் மாக்சிமஸ் ஜோனிதி ஒங்கிலி 

துணை அமைச்சர்: டத்தோ ஹாஜா ஹனிபா ஹாஜார் தாயிப்

போக்குவரத்து அமைச்சர் – டத்தோஸ்ரீ வீ கா சியோங் 

துணை அமைச்சர்: ஹாஜி ஹாஸ்பி ஹாஜி ஹாபிபுல்லா 

சுற்றுச் சூழல் அமைச்சர் – துவான் இப்ராகிம் துவான்  மான் 

துணை அமைச்சர்: டத்தோ டாக்டர் அகமட் மாஸ்ரிசால் முகமட் 

மனிதவள அமைச்சர் – டத்தோஸ்ரீ எம்.சரவணன் 

துணை அமைச்சர்: ஹாஜி அவாங் ஹாஷிம் 

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் – டத்தோஸ்ரீ பங்லிமா ஹாஜி அனுவார் மூசா 

துணை அமைச்சர்: டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் 

மகளிர், குடும்ப நல அமைச்சர் – டத்தோஸ்ரீ ரீனா முகமட் ஹருண்

துணை அமைச்சர்: டத்தோ ஹாஜா சித்தி சாய்லா முகமட் யூசோப்   

உயர்கல்வி அமைச்சர் – டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் 

துணை அமைச்சர்: டத்தோ டாக்டர் மன்சோர் ஓத்மான்

ஆற்றல் மற்றும் இயற்கை வளம் – டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் ஹாஜி நசரா

துணையமைச்சர் – அலி அனாக் பிஜூ

உள்துறை அமைச்சர் – டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் 

துணை அமைச்சர் 1: டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஜி இஸ்மாயில் ஹாஜி முகமட் சாயிட் 

துணை அமைச்சர் 2: ஜோனதன் யாசின் 

சுகாதார அமைச்சர் – டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பின் பாபா 

துணை அமைச்சர் 1: டத்தோ டாக்டர் நூர் அஸ்மி காசாலி 

துணை அமைச்சர் 2: டத்தோ ஏரோன் அகோ டாகாங் 

விவசாயம் மற்றும் உணவுத் தொழில் அமைச்சர் – டத்தோஸ்ரீ டாக்டர் ரோனால்டு கியாண்டி 

துணை அமைச்சர் 1: டத்தோஸ்ரீ அகமட் ஹாம்சா

துணை அமைச்சர்2: டத்தோ ஹாஜி சே அப்துல்லா மாட் நாவி 

புறநகர் மேம்பாட்டு அமைச்சர் – டத்தோ டாக்டர் அப்துல் லாதிப் ஹாஜி அகமட் 

துணை அமைச்சர் 1: டத்தோ அப்துல் ராஹ்மான் முகமட்

துணை அமைச்சர் 2: டத்தோ ஹென்ரி சம் அகோங் 

வெளியுறவுத் துறை அமைச்சர் – டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் 

துணை அமைச்சர் : டத்தோ கமாருடின் ஜாபார் 

உள்நாட்டு வாணிபத் துறை மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் – டத்தோ அலெக்சாண்டர் நந்தா லிங்கி 

துணை அமைச்சர்: டத்தோ ரோசோல் வாஹிட் 

தொடர்புத் துறை, பல்ஊடக அமைச்சர் – டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா 

துணை அமைச்சர்: டத்தோ சாஹிடி சைனுல் அபிடின் 

வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர்– ஹஜ்ஜா சுரைடா கமாருடின் 

துணை அமைச்சர்: டத்தோஸ்ரீ இஸ்மாயில் அப்துல் முத்தலிப்

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் – கைரி ஜாமாலுடின் 

துணை அமைச்சர்: அகமட் அம்சாட் ஹாஷிம் 

தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் – டத்தோஸ்ரீ ஜுனைடி துவாங்கு ஜாபார் 

துணை அமைச்சர்: டத்தோ வீரா மாஸ் எர்மியாதி ஹாஜி ஷாம்சுடின்  

தோட்டத் தொழில் மற்றும் மூலத் தொழில் அமைச்சர்– டாக்டர் முகமட் கைருடின் அமான் ரசாலி

துணை அமைச்சர் 1: டத்தோஸ்ரீ டாக்டர் வீ ஜெக் செங்

துணை அமைச்சர் 2: வில்லி அனாக் மொங்கின்

சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் – டத்தோஸ்ரீ ஹாஜா நேன்சி சுக்ரி 

துணை அமைச்சர்: டத்தோ டாக்டர் ஜெப்ரி கிதிங்கான் 

ஒற்றுமைத் துறை அமைச்சர்: டத்தோ ஹாலிமா முகமட் சாடிக் 

துணை அமைச்சர்: டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் – டத்தோ ரிசால் மெரிகன் நைனா மெரிகன் 

துணை அமைச்சர்: வான் அகமட் பாய்சால் (செனட்டராக நியமிக்கப்படுவார்)