Home One Line P1 மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கிய பெண்கள், குடும்ப துணை அமைச்சர்- டுவிட்டரிலிருந்து வெளியேறினார்!

மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கிய பெண்கள், குடும்ப துணை அமைச்சர்- டுவிட்டரிலிருந்து வெளியேறினார்!

817
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொடர்பாக பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சித்தி சைலா முகமட் யூடோப் செய்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர், அவர் டுவிட்டரிலிருந்து வெளியேறினார்.

“கொரொனாவைரஸிலிருந்து இறப்பதற்கான வாய்ப்பு 1 விழுக்காடு மட்டுமே, அதே நேரத்தில் எந்த நேரத்திலும் இறக்கும் வாய்ப்பு 100 விழுக்காடாகும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அவரின் இடுகை இணைய பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

அண்மையில், விமானப் பணியாளர்கள் ஷரியா-இணக்கமான சீருடையை அணிய வேண்டும் என்று துணை அமைச்சர் அளித்த பேட்டியில் சில நாட்கள் அவர் சர்ச்சைக்கு உள்ளாகினார்.

அவரது கருத்துக்கள் மலேசிய தேசிய விமான உதவியாளர்களின் கோபத்தை உண்டாக்கியது. கொவிட் -19 பாதிப்புக்கு, கூடுதலாக விமான ஊழியர்கள் வேலை இல்லாமல் போகும் சூழலை எதிர்நோக்கும் நேரத்தில் இம்மாதிரியான கேள்வியைக் கொண்டுவருவதில் அவரது முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.