Home One Line P1 செலாயாங் மொத்த சந்தை மூடப்படுவதாக வெளியான செய்தி வதந்தி!

செலாயாங் மொத்த சந்தை மூடப்படுவதாக வெளியான செய்தி வதந்தி!

484
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து செலாயாங் மொத்த சந்தை மூடப்படுவதாக வெளியான வதந்திகளை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

“மொத்த சந்தையை மூடுவதற்கு எந்த உத்தரவும் இல்லை. அது போலியான செய்தி” என்று கோலாலம்பூர் மேயர் நோர் ஹிஷாம் மலேசியாகினியிடம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கெப்போங் நாடாளுமன்ற லிம் லிப் எங் இம்மாதிரியான வதந்திகள் பொய்யானவை என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் மொத்த விற்பனையாளர்கள் சங்கத்துடன் பேசியதால் இது எனக்குத் தெரியும்” என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒலி பதிவு, மக்களை உணவுப் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தி, நாளை (இன்று) முதல் இரண்டு வாரங்களுக்கு சந்தை மூடப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையில், கோலாலம்பூர் காய்கறி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதன் உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தங்கள் தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர்.

“சந்தையைச் சுற்றியுள்ள 200- க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஸ்ரீ பெட்டாலிங் கூட்டத்தில் கலந்து கொண்டதாக சங்கத்திற்கு தகவல் கிடைத்தது.”

“எனவே, விற்பனையில் பங்கேற்கும் தொழிலாளர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் அல்லது தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அது தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொடர்பான சமீபத்திய சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங்கில் பங்கேற்றவகளிடம் அதிகமாகப் பதிவாகி உள்ளது.