Home One Line P1 தேமு புதிய பொதுச் செயலாளராக அனுவார் மூசா நியமனம்!

தேமு புதிய பொதுச் செயலாளராக அனுவார் மூசா நியமனம்!

470
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா நியமிகப்பட்டுள்ளதாக அம்னோ தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை நடந்த கூட்டதில் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோருக்கு பதிலாக அனுவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திங்களன்று நடந்த தேசிய முன்னணி உச்சமட்டக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி ஓர் அறிக்கையில் தெரிவித்தார். தெங்கு அட்னான் தேசிய முன்னணியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

“டத்தோ முகமட் சாப்ரி ஆப் அசிஸ், செனட்டர் டத்தோ டாக்டர் அகமட் மஸ்ரிசால் முகமட்டுக்கு பதிலாக தேசிய முன்னணி நிர்வாக செயலாளராக நியமிக்கப்படுவார்” என்று அவர் கூறினார்.