Home One Line P2 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர் இணைப்பில் இருக்கும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர் இணைப்பில் இருக்கும்!

638
0
SHARE
Ad

சிங்கப்பூர்: தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் என்று அக்குடியரசின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். மலேசியாவில் நேற்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

“நம் மக்கள் மற்றும் வணிகங்கள், வாழ்க்கையையும் வணிகத்தையும் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை” என்று அவர் கூறினார்.

கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து மார்ச் 18 முதல் 31 வரை மலேசியா நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும் என்று பிரதமர் நேற்று நேரடி ஒளிபரப்பில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

நாட்டின் வரலாற்றில் முதன்முதலில் இந்த ஆணை பிரதமரால் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 125 புதிய கொவிட் -19 நேர்மறை சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன. மலேசியாவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இது 553-ஆக உயர்த்தியது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே பயணிக்கும் மலேசிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் வணிகங்கள் , வணிக தொடர்ச்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டியிருக்கலாம் என்று சான் தெரிவித்தார்.

ஆசியான் உள்ளிட்ட வெளிநாட்டினரின் நுழைவுக்கான எல்லை கட்டுப்பாட்டை சிங்கப்பூர் நேற்று அறிவித்தது.

இருப்பினும், இதில் மலேசியா சம்பந்தப்பட்ட கடல் மற்றும் நிலப் பயணம் இடம்பெறவில்லை. அதாவது மலேசியர்களும் சிங்கப்பூர் மக்களும் வழக்கம் போல் இரு தரப்பிலிருந்தும் பயணிக்க முடியும்.