கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை அமல்படுத்தும் பணியில் இராணுவம் ஈடுபடவில்லை என்றும், மாறாக மலேசிய காவல்துறை சம்பந்தப்பட்டது என்று மலேசிய ஆயுதப்படைத் தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ அபெண்டி புவாங் தெரிவித்தார்.
“தற்போது, உத்தரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து (அமலாக்க) கடமைகளையும் காவல் துறை தீர்மானிக்கும்,” என்று அவர் கூறினார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதில் இராணுவப்படை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து அபெண்டியிடம் கருத்து கேட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த உத்தரவின் அறிவிப்பு நாட்டின் எல்லைகள் மற்றும் நீர்நிலைகளில் செயல்பாடுகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நிறுத்துவதை பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
“நாட்டின் எல்லைகள் மற்றும் நீர்நிலைகளில் செயல்பாடுகள் இயல்பாகவே தொடரும், ஆனால் இராணுவம் தேவையற்ற பயிற்சியைக் குறைக்கும்” என்று அவர் கூறினார்.
கொவிட் -19 பாதிப்பு பரவாமல் தடுக்க மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை நாடு முழுவதும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படும் என்று பிரதமர் நேற்று அறிவித்தார்.