Home One Line P1 நாட்டிற்குள்ளேயே பயணம், சுற்றுலா செல்வதை தவிர்க்கவும்!- தேசிய பாதுகாப்பு மன்றம்

நாட்டிற்குள்ளேயே பயணம், சுற்றுலா செல்வதை தவிர்க்கவும்!- தேசிய பாதுகாப்பு மன்றம்

575
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டிற்குள்ளேயே பயணம் செய்ய மற்றும் சுற்றுலா இடங்களைப் பார்வையிட விரும்பும் மலேசியர்கள் நாளை முதல் மார்ச் 31 வரை இரண்டு வாரங்களுக்கு அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது மலேசியர்கள் என்ன செய்ய முடியும் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியலை (எப்ஏகியூ) என்எஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

ஒரு தனிநபர் உள்நாட்டு விடுமுறைக்குத் திட்டமிட்டு, அதற்காக முழுமையாக பணம் செலுத்தியுள்ளதோடு, அத்தகைய திட்டங்களுடன் தனிநபர் தொடர வேண்டுமா என்ற கற்பனையான சூழ்நிலையை அது கோடிட்டுக் காட்டியது.

#TamilSchoolmychoice

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், சமூக நடவடிக்கைகளுக்காக சுற்றுலா இடங்களுக்குச் செல்வது உட்பட பொதுமக்கள் வெளியே செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தேசிய அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விஷயங்கள் இதில் சம்பந்தப்படவில்லை. உங்கள் விடுமுறையைத் தொடர வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று என்எஸ்சி இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வார காலப்பகுதியில் ஏற்கனவே தங்குமிடத்திற்காக பணம் செலுத்தியவர்கள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெற விரும்புவோர், தங்கும் விடுதிகளுடன் நேரடியாகப் பேசுமாறு என்எஸ்சி அவர்களுக்கு அறிவுறுத்தியது.

“இந்த உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு செலுத்தப்பட்ட பணத்திற்கான பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக தங்கும்விடுதிகளுடன் நேரடியாக விவாதிக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்று அது கூறியது.

நேற்றிரவு, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அறிவித்தார்.