Home One Line P1 “தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்கள்!”- தேசிய பாதுகாப்பு மன்றம்

“தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்கள்!”- தேசிய பாதுகாப்பு மன்றம்

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து, இன்று புதன்கிழமை (மார்ச் 18) முதல் மார்ச் 31 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் எல்லா நேரங்களிலும் வீட்டில் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கொவிட் -19 நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட சந்திப்பு இடைவெளி தூரத்தை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கும் நினைவூட்டப்படுகிறது என்று தேசிய பாதுகாப்பு மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மார்ச் 18 நள்ளிரவு முதல் நடைமுறையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அதிகாரிகள் வகுத்துள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்று அது கூறியது.

கடந்த திங்கட்கிழமை, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய உத்தரவை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எம்கேஎன் மற்றும் பிரதமர் அலுவலகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. மேலும் ஒழுங்கை செயல்படுத்தும் செயல்முறையை சீராக நடத்துவதை உறுதி செய்வதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.