“ஜூன் 30- ஆம் தேதி வரைக்கும் மூன்று மாதங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது” என்று உயர்கல்வி அமைச்சர் நோராய்னி அகமட் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாகவும், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடன் பெற்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.
Comments