Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் கீழ்ப்படிய மறுத்தால், இராணுவத்தின் சேவை பயன்படுத்தப்படும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் கீழ்ப்படிய மறுத்தால், இராணுவத்தின் சேவை பயன்படுத்தப்படும்!

552
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மக்கள் இன்னும் கீழ்ப்படிய மறுத்தால், காவல் துறையைத் தவிர, ஆயுதப்படையின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நேற்றைய நிலவரப்படி, மக்களின் இணக்கத்தின் அளவு சுமார் 60 விழுக்காடாக சதவீதமாக இருப்பதாகவும், விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதை அரசாங்கம் காண விரும்புவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இராணுவம் நிறுத்தப்படுவதற்கு முன்பு, அது தேவையில்லை என்று நான் நம்புகிறேன், வேறு வழியில்லை என்றால் அவ்வாறு செய்யப்படும்.”

” 60 – 70 விழுக்காடு மட்டுமே உடன்பட்டுள்ளனர். மாற்றம் இல்லையெனில், இராணுவம் பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று கோலாலம்பூரில் செய்தி மாநாட்டில் அவர் கூறினார்.