Home One Line P1 கொவிட்-19: ஈபிஎப் 2-வது கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு, மாதம் அதிகபட்சமாக 500 ரிங்கிட்...

கொவிட்-19: ஈபிஎப் 2-வது கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு, மாதம் அதிகபட்சமாக 500 ரிங்கிட் பெறலாம்!

557
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொடர்பாக ஏற்பட்ட சுமையைக் குறைப்பதற்கு, இப்போது, ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) இரண்டாவது கணக்கிலிருந்து நிதிகளை எடுப்பதற்கு சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ‘ஐ-லெஸ்தாரி’ மூலம் எடுக்கப்படும் இந்த நிதிகளானது, 12 மாதங்களுக்கு அதிகபட்சமாக 500 ரிங்கிட்டுக்கு உட்பட்டது என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார்.

“இந்த வசதி மூலம், 55 வயதிற்கு உட்பட்ட அனைத்து ஈபிஎப் சந்தாதாரர்களும் கணக்கு 2- இல் இருந்து நிதிகளைப் பெறலாம், ஒவ்வொன்றும் 12 மாத காலத்திற்கு அதிகபட்சம் 500 ரிங்கிட்டுக்கு உட்பட்டது.”

#TamilSchoolmychoice

“ஏப்ரல் 1-ஆம் தேதியன்று முதல் விண்ணப்பங்கள் செய்யப்படலாம். இந்த முயற்சி 12 மில்லியன் ஈபிஎப் சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த செலவினம் 40 பில்லியன் ரிங்கிட் வரை மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.