Home One Line P1 சுகாதார பணியாளர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளானதற்கு மாமன்னர் வருத்தம்!

சுகாதார பணியாளர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளானதற்கு மாமன்னர் வருத்தம்!

529
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார ஊழியர்கள் பலர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி குறித்து மாமன்னர் சுல்தான் அப்துல்லா தனது வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.

அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாசில் ஷாம்சுடின் கூறுகையில், சுல்தான் அப்துல்லா, அவர்களின் நிலைமை குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் எனவும், இந்த நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் தொழிலாளர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் ஒதுக்குவதை தாம் அங்கீகரிப்பதாகவும் அவர் கூறினார்.

மார்ச் 21-ஆம் தேதி நிலவரப்படி, சுகாதார அமைச்சு தனது ஊழியர்களில் 19 பேரும், தனியார் சுகாதார மருத்துவமனைகளிலிருந்து ஐந்து பேரும் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் வரை, 212 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

#TamilSchoolmychoice

“19 சுகாதார அமைச்சு ஊழியர்களில் இருவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீ பெட்டாலிங் மசூதி நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களின் நெருங்கிய தொடர்புகள் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.