Home One Line P2 கொவிட் -19 : தோக்கியோ ஒலிம்பிக்ஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

கொவிட் -19 : தோக்கியோ ஒலிம்பிக்ஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

928
0
SHARE
Ad

தோக்கியோ – நடக்குமா? நடக்காதா? என விளையாட்டு இரசிகர்கள் காத்திருந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஜப்பானில் நடைபெறுவதாக இருந்தது.

ஏற்கனவே ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அறிவித்து விட்டன.

#TamilSchoolmychoice

2021-இல் எப்போது ஒலிம்பிக்ஸ் நடைபெறும் என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை எனினும் இந்த ஆண்டு நடைபெறாது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் அண்மைய ஆண்டுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.