Home கலை உலகம் இலங்கை இசை நிகழ்ச்சி ரத்து- பாடகர் மாணிக்க விநாயகம் அறிக்கை

இலங்கை இசை நிகழ்ச்சி ரத்து- பாடகர் மாணிக்க விநாயகம் அறிக்கை

829
0
SHARE
Ad

singerசென்னை, ஏப்ரல் 10- இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25 பேர் இலங்கை செல்ல இருந்தனர்.

இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவான்மியூர் சாஸ்திரி நகரில் உள்ள மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். பாடகர்கள் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டார்கள்.

மாணிக்க விநாயகத்திடம் இலங்கை செல்ல வேண்டாம் என வற்புறுத்தி மனுவும் கொடுத்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணிக்க விநாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

#TamilSchoolmychoice

தமிழ் உணர்வாளர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து 11-ந்தேதி (நாளை) இலங்கை வவுனியாவில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்கு நானும், மற்றவர்களும் யாரும் செல்லவில்லை என்பதையும், எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டோம் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.