ஜெனீவா: கொவிட்-19 தொற்றுநோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
முதல் 100,000 சம்பவங்களை அடைய ஆரம்பத்தில் 67 நாட்கள் எடுத்த இத்தொற்று, அடுத்த 100,000 சம்பவங்களுக்கு 11 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆயினும், தற்போது 100,000 சம்பவங்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே எடுத்துள்ளது.
உலகம் இதிலிருந்து விடுப்பட இன்னும் தாமதமாகவில்லை என்று உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் வீட்டிலேயே இருக்கவும், தடை கட்டுப்பாடு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் டாக்டர் டெட்ரோஸ் கேட்டுக் கொண்டார்.
கடுமையான சோதனை மற்றும் தொடர்பு கண்காணிப்பு உத்திகளைப் பயன்படுத்த டெட்ரோஸ் உலகத்தை வலியுறுத்தியுள்ளார்..