Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 15-வது மரணம் பதிவு!

கொவிட்-19: நாட்டில் 15-வது மரணம் பதிவு!

844
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.

இதுவரையிலும் கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்று அதிகாலை மணி 5:35-க்கு மரணமடைந்த 71 வயது ஆடவர் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மேலும், அவருக்கு நீண்ட கால நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments