Home One Line P1 கொவிட்-19: இன்று முதல் மளிகை பொருட்களை வாங்குவதற்கான இயக்க நடைமுறை கடுமையாக்கப்படுகிறது!

கொவிட்-19: இன்று முதல் மளிகை பொருட்களை வாங்குவதற்கான இயக்க நடைமுறை கடுமையாக்கப்படுகிறது!

1061
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், தினசரி மளிகை பொருட்களை வாங்குவதில் மக்களின் நடமாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் இம்மாதிரியான நடமாட்டம் குறித்த இரண்டாம் கட்டத்தை அறிமுகப்படுத்தும்போது பயன்படுத்த வேண்டிய புதிய நிலையான இயக்க நடைமுறையை தயார் செய்து வருகிறது.

#TamilSchoolmychoice

“நாங்கள் பார்த்த வரை முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் இருந்தபோது, நியாயமானவை என்று தோன்றும் பல விஷயங்கள் அனுமதிக்கப்பட்டன. காவல் துறையின் கூற்றுப்படி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இணக்கம் இன்னும் 95 விழுக்காடடாக உள்ளது. இன்னும் பலர் இதனைக் குறைத்துப் பார்க்கின்றனர். புதிய நிலையான இயக்க நடைமுறையை அறிமுகப்படுத்த அல்லது வெளியிட தேசிய பாதுகாப்பு மன்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று முதல் விதிகள் மிகவும் கடுமையானதாக இருக்கும், எனவே பொருட்களை வாங்குவது, உணவு வாங்குவது போன்றவற்றில் அதிக கட்டுப்பாடுகள் இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.