பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 10 – எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிகேஆர் உதவித் தலைவர்களுள் ஒருவரான தியான் சுவா தனது நடப்பு நாடாளுமன்ற தொகுதியான பத்துவிலேயே மீண்டும் போட்டியிடுவார் என்று கெஅடிலான் கட்சித் தலைவரும், அன்வாரின் மனைவியுமான டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே, பணியில் இருந்த காவலரை அடித்த குற்றத்திற்காக உயர்நீதி மன்றம், தியான் சுவாவிற்கு 6 மாதம் சிறை தண்டனையும், 3000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
சட்ட விதிகளின் படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது, அவர் செய்த குற்றத்திற்காக ஒரு வருட சிறையோ அல்லது 2000 ரிங்கிட்டுக்கு மேலோ தண்டனையாக விதிக்கப்பட்டால் அவர் பதவி வகிக்கும் தகுதியை உடனடியாக இழந்துவிடுவார்.
ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றம் தியான் சுவா மீது விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ததோடு, அவரது அபராதத்தை 3000 ரிங்கிட்டிலிருந்து 2000 ரிங்கிட் ஆகக் குறைத்தது.
எனவே இது பற்றி வான் வான் அஸிஸா கூறுகையில்,
“தியான் சுவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை உயர் நீதிமன்றம் 2000 ரிங்கிட்டாக குறைத்த காரணத்தினால் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். இதை நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே அவர் வரும் பொதுத்தேர்தலில் பிகேஆர் சார்பாக தனது நடப்பு நாடாளுமன்ற தொகுதியான பத்துவிலேயே மீண்டும் போட்டியிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பத்து நாடாளுமன்ற தொகுதி நிலவரம் பின்வருமாறு,