Home One Line P1 கொவிட்-19: கெடா, சிலாங்கூரிலும் ரம்லான் சந்தை நடைபெறாது!

கொவிட்-19: கெடா, சிலாங்கூரிலும் ரம்லான் சந்தை நடைபெறாது!

436
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு கெடா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த ரமலான் சந்தையை மாநில அரசு இரத்து செய்துள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார்.

பெரிய அளவிலான கூட்டம் கூடிவருவதைத் தடுக்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது கொவிட் -19 பாதிப்பின் பரவலை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் ஏலதாரர்களிடமிருந்து வைப்புத் தொகையை திரும்பப் பெற வேண்டும்,” என்று அவர் நேற்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, கொவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக அனைத்து ரமலான் சந்தையையும் இரத்து செய்ய சிலாங்கூர் அரசு முடிவு செய்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.

திரெங்கானு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களும் இந்த இரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஆயினும், கூட்டரசுப் பிரதேசத்தில் ரம்லான் சந்தை ஒரு சில மாற்றங்களுடன் நடத்தப்படலாம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா அண்மையில் தெரிவித்திருந்தார்.