கோலாலம்பூர்: மார்ச் 27 முதல் நாடு முழுவதிலும் சுமார் 252 பகுதிகள் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இதனிடையே, பல்வேறு தரப்புகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதன் காரணமாக சுகாதார அமைச்சு கிருமிநாசினி தெளிப்பு குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“சிலர் குறிப்பிட்ட விதிமுறைக்கு உட்பட்டு இணக்கமாக செயல்படவில்லை என்று புகார் கூறியுள்ளனர், எனவே ஒவ்வொரு கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையும் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து சுகாதார அமைச்சு நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்கி வெளியிட்டுள்ளது.”
“இந்த நடவடிக்கை பொது இடங்களில் மட்டுமல்ல, வீடு வீடாகவும் தொடரும்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.