கோலாலம்பூர்: இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்றுநோயைப் பொறுத்து, இது சுகாதார அமைச்சினால் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், கொவிட் -19-க்கான தற்போதைய சம்பவங்கள் குறைந்து நிலையான புள்ளிவிவரங்களைக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கினால், இதன் எண்ணிக்கை மேலும் சரிவைக் காணும் என்று நான் நம்புகிறேன்.”
“இருப்பினும், இது நிகழுமுன் கடுமையான இணக்கம் இருக்க வேண்டும். உத்தரவை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை தீர்மானிக்க அதை சுகாதார அமைச்சகத்திற்கு விட்டு விடுவோம், ”என்று அவர் தெரிவித்தார்.