Home கருத்தாய்வு இப்ராகிம் அலி நடவடிக்கையால் தேசிய முன்னணி வாக்குகள் பறிபோகும் அபாயம்.

இப்ராகிம் அலி நடவடிக்கையால் தேசிய முன்னணி வாக்குகள் பறிபோகும் அபாயம்.

855
0
SHARE
Ad

Ibrahim-Ali---Sliderஜனவரி 23 – ஏற்கனவே, எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கியிருக்கும் தேசிய முன்னணி, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி தொடர்ந்து கிறிஸ்துவ சமயத்தினராக எதிராக தொடுத்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து மேலும் வாக்குகளை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக கிறிஸ்துவ சமயத்தவர்கள் மீதும், மலாய் மொழி பைபிள்கள் மீதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் கிறிஸ்துவ வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பக் கூடும்.

இப்ராகிம் அலியின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து அம்னோ தரப்பிலிருந்தும், மற்ற தேசிய முன்னணி உறுப்பிய கட்சிகளின் முக்கிய தலைவர்களிடமிருந்தும் எந்தவித எதிர்ப்பு அறிக்கையும் வெளிவருவதில்லை என்பதால், தேசிய முன்னணி மீது முஸ்லிம் அல்லாத வாக்காளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நாள்தோறும் சரிந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியில் எந்த அங்கமும் வகிக்காத அவருடன் அம்னோவும் தேசிய முன்னணியும் இணைந்து செயல்பட்டு வருவது போன்ற தோற்றம் உருவாகியிருப்பதும் தேசிய முன்னணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் இப்ராகிம் அலியுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது தேசிய முன்னணியை மேலும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

தனது பங்களிப்பாலும், பிரச்சாரத்தாலும் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு வலுவூட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாதீர் குறுகிய மனப்போக்கு கொண்ட இப்ராகிம் அலி, பெர்காசா போன்ற இயக்கங்களுடன் இணைந்து செயல்படுதவதும் அவர்களுடன் கூட்டங்களில் கலந்து கொள்வதும் மகாதீரின் தோற்றத்திற்கும் வாக்காளர்களிடையை மரியாதைக் குறைவை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதோடு, சபாவில் நடைபெற்று வரும் கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பிலான அரச விசாரணைக் குழுவின் மூலம் மகாதீர்தான் கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் பின்னணியில் செயல்பட்டார் என்பது தெரிய வருவதால், சபாவிலும், சரவாக்கிலும், ஏன் மேற்கு மலேசியாவிலும் கூட அவரது தோற்றம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சூ.ழ்நிலையில் அப்படியே அவர் பிரச்சாரத்திற்கு வந்தாலும் அது தேசிய முன்னணியின் வாக்கு வங்கியை மேலும் கடுமையாக பாதிக்கும் என்றும் கருதப்படுகின்றது.