Home One Line P1 கொவிட்-19: மலேசியாவின் பொருளாதார வலிமை பெரிதாகப் பாதிக்கப்படவில்லை!

கொவிட்-19: மலேசியாவின் பொருளாதார வலிமை பெரிதாகப் பாதிக்கப்படவில்லை!

639
0
SHARE
Ad
படம்: நன்றி என்எஸ்டிபி

கொவிட்-19 பாதிப்பு மலேசியாவின் பொருளாதார வலிமையை மாற்றவில்லை என்று தேசிய வங்கி ஆளுநர் நோர் ஷாம்சியா தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு -2 முதல் 0.5 விழுக்காடு வரை வளர்ச்சியை எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மலேசிய பொருளாதாரம் இந்த சவால்களை எதிர்கொண்டு வலுவாக வெளிப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

2019-ஆம் ஆண்டிற்கான 3.5 பில்லியன் ரிங்கிட்டை பிஎன்எம் அரசாங்கத்திற்கு செலுத்துகிறது. இது முந்தைய ஆண்டின் 2.5 பில்லியன் ரிங்கிட் இலாபத்துடன் ஒப்பிடுகையில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2020- ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த வளர்ச்சி படிப்படியாக மேம்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.