கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை (4 ஏப்ரல்) தொடங்கி எக்ஸ்பிரேஸ் ரயில் லீங்க் (ஈஆர்எல்) அதன் அனைத்து இரயில் சேவைகளையும் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அனைத்து விமான பயணங்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் விளைவாக கிட்டத்தட்ட விமானப் பயணிகள் மற்றும் ஈஆர்எல் சேவைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக ஈஆர்எல் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, இந்த காலகட்டத்தில் அதன் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீட்டுக் கொண்ட பிறகு, ஈஆர்எல் அதன் அனைத்து பயணிகளுக்கும் தொடர்ந்து சேவைகளை வழங்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஏற்பட்ட சிரமத்திற்கு ஈஆர்எல் மன்னிப்பு கோருவதாகவும், பயணிகள் தங்கள் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யயும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.