கோலாலம்பூர்: கடந்த மாத இறுதியில் சிங்கப்பூர் குடியரசு தற்காலிக தங்கும் வசதி வழங்குவதை நிறுத்திய பின்னர் சிங்கப்பூரில் பணிபுரியும் சில மலேசியர்கள் வீடு திரும்பி உள்ளனர்.
அவர்களில் பலர் 400- க்கும் மேற்பட்ட நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்படுவர்.
ஆரம்ப இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்காக முதலாளிகளின் செலவுகளை ஈடுசெய்ய ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 50 சிங்கப்பூர் டாலர் (151 ரிங்கிட்) வழங்கிய விடுதி ஆதரவு திட்டத்தை அக்குடியரசு நீட்டிக்காது என்று சிங்கப்பூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூரில் தற்போதைக்கு 12 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ளன.