கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் போது ரம்லான் சந்தைகள் நடத்த அனுமதி வழங்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மீட்டுக் கொள்ளப்பட்டால், தேசிய பாதுகாப்புக் குழு இந்த விஷயத்தை தீர்மானிக்க நிலையான இயக்க நடைமுறைகளை வழங்கும் என்று அவர் கூறினார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு நாங்கள் நிலையான இயக்க நடைமுறைகளை தயாரிப்போம். அதன் பிறகு, ரம்லான் சந்தை செயல்படுத்தப்படலாமா அல்லது முடியாதா என்று முடிவு செய்யப்படும்.”
“நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை கட்டம் 2 தொடரும் வரை அல்லது மற்றொரு ஆணை பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே, ரம்லான் சந்தை அனுமதிக்கப்படாது” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு அமைச்சர்கள் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் கூறினார்.