Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க வழங்கப்பட்ட அனுமதி இரத்து!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க வழங்கப்பட்ட அனுமதி இரத்து!

865
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதற்கான ஒப்புதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் அதன் செயல்பாடுகளைத் தொடர ஹெய்னெக்கன் மலேசியா பெர்ஹாட்  மற்றும் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்திற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து தலைவர்கள் மது ஓர் அத்தியாவசிய தயாரிப்பு இல்லாதபோது, அரசாங்கம் எப்படி இந்த தொழிற்சாலைக்கு விலக்கு அளித்தது என்ற கேள்வியை முன்வைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு இன்று திங்கட்கிழமை அமைச்சரவைக் குழு சந்திப்பிற்குப் பிறகு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.