Home One Line P1 கொவிட்-19: புத்ராஜெயா, ரெம்பாவ் மற்றும் ஜாசின் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன!

கொவிட்-19: புத்ராஜெயா, ரெம்பாவ் மற்றும் ஜாசின் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன!

463
0
SHARE
Ad

புத்ராஜெயா: கொவிட்-19 நோய்தொற்று அதிகமாக புத்ராஜெயா, ரெம்பாவ் மற்றும் ஜாசின் ஆகிய பகுதிகளில் பதிவுச் செய்யப்பட்டதால், இப்பகுதிகள் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்று பகுதிகளும் நாட்டில் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட  19, 20 மற்றும் 21- வது பகுதிகளாகும்.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி, புத்ராஜெயாவில் 41 சம்பவங்களும், மலக்கா ஜாசின் 42 சம்பவங்களும், நெகிரி செம்பிலான் ரெம்பாவில் 41 சம்பவங்களும் பதிவாகின.

“ஏப்ரல் 6 மதியம் 12 மணி நிலவரப்படி சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சிவப்பு மண்டலம் பகுதிகள் 21- ஆக அதிகரித்துள்ளது.”

“சிவப்பு மண்டலத்தின் புதிய பகுதிகள் புத்ராஜெயா, ஜாசின் மற்றும் ரெம்பாவ்.”

“வீட்டில் இருந்தது,   உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்” என்று தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளது.