Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறையினரின் புகைப்படங்கள், காணொளிகளை எடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறையினரின் புகைப்படங்கள், காணொளிகளை எடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

443
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் காவல்துறையைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பதிவு செய்யும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இது பொறுப்பற்ற நடவடிக்கை என்றும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறுவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“சாலை போக்குவரத்தை தடுப்பதற்காக அல்லது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே காவல் துறையின் சாலைத் தடுப்புகள் நாடு தழுவிய அளவில் ஏற்றப்படுத்தப்படவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.”

“மக்களைக் காப்பாற்றுவதற்காக கொவிட் -19 தொற்று சங்கிலியை உடைக்கும் நோக்கத்துடன் காவல்துறை ஒரு உன்னதமான பணியை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் புக்கிட் அமானில் பெர்னாமாவிடம் கூறினார்.

சாலை தடுப்புகளில் உள்ள காவல்துறையினர் கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

“அதைச் செய்யும் நபர்கள் (காவல்துறையின் மீது ஒரு மோசமான காட்சியை வெளியிடும் நோக்கத்துடன் பதிவுசெய்து புகைப்படங்களை எடுக்கிறார்கள்) பல தரப்புகள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உங்களை கைது செய்யக் காத்திருக்கின்றன என்பதை வலுவாக நினைவுபடுத்திக் கொள்கிறேன்.”

“அவர்கள் பொருட்களை வாங்க வெளியே சென்றால், அது ஒரு பிரச்சனையல்ல, ஆனால் அவர்கள் சாலைத் தடுப்புகளை பதிவு செய்ய வேண்டுமென்றே வெளியே சென்றால், அது ஒரு குற்றமாகும், ஏனெனில் தங்கள் கடமைகளைச் செய்யும் காவல்துறையினர் படமாக்கப்பட வரவில்லை ,” என்று அவர் கூறினார்.