கோலாலம்பூர்: நாட்டில் இதுவரையிலும் கொவிட்-19 பாதிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்துவரும் நான்கு மிகப்பெரிய நிகழ்வுகளை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முதலாவதாக, ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்ளீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் இவர்கள் 42 விழுக்காட்டினர் ஆவர்.
இரண்டாவதாக இத்தாலிக்குச் சென்று கூச்சிங்கிற்கு திரும்பியவர். மூன்றவதாக, கூச்சிங்கில் நடைபெற்ற தேவாலய நிகழ்ச்சி, மற்றும் நான்காவதாக சிலாங்கூர் பாங்கியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியாகும்.
இவற்றில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.